×

பனியன் தொழிலாளி தற்கொலை

 

திருப்பூர், ஜூன் 10: திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் சூர்யா (23). இவர், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சூர்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், சூர்யாவின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். சூர்யா தொடர்ந்து அழைத்தும் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சூர்யா கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூர்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பனியன் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Banyan ,Tirupur ,Surya ,Veerapandi, Tirupur ,Banyan Company ,Dinakaran ,
× RELATED வாலிபரை கடத்தி கொலை 2 பேருக்கு ஆயுள்...