×

புதுச்சேரியில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் கேட் ஏறி குதித்து சென்ற எம்எல்ஏ மீது வழக்குபதிவு

புதுச்சேரி, ஜூன் 7: புதுச்சேரி கம்பன் கலையரங்கில் சுற்றுச்சூழல் தினவிழா 5ம்தேதி நடைபெற்றது. அப்போது நேரு எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் கேட் ஏறி குதித்து விழாவுக்கு சென்று தலைமை செயலருக்கு எதிராக ஆவேசமாக பேசினார். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை எஸ்ஐ ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில், 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 186 (அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்) ஆகிய பிரிவின் கீழ் நேரு எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டது தொடர்பாகவும் பெரியகடை எஸ்ஐ வீரபத்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேரு எம்எல்ஏ, பெரியார் தி.க. லோகு அய்யப்பன், தமிழர் களம் அழகர் மற்றும் ராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் மீதும் சட்டவிரோதமாக கும்பல் கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சுயேட்சை எம்எல்ஏ அரசு விழா நடைபெற்ற கம்பன் கலையரங்கில் நுழைவு வாயில் கதவை ஏறி குதித்து உள்ளே சென்றதை தடுக்க தவறிய ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து டிஜிபி மனோஜ்குமார் லால் உத்தரவிட்டுள்ளார். ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் பொறுப்பை உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக எஸ்பி சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.

The post புதுச்சேரியில் முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் கேட் ஏறி குதித்து சென்ற எம்எல்ஏ மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : MLA ,Chief Minister ,Puducherry ,Day ,Puducherry Kampan Art Gallery ,Nehru ,Dinakaran ,
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...