×

(வேலூர்)சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன் வைகாசி மாத பிரம்மோற்சவம்

பொன்னை, ஜூன் 7: பொன்னை கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் பொன்னியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் 8ஆம் நாளான நேற்று பொன்னியம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். தொடர்ந்து காலை 10 மணிக்கு கூழ் ஊற்றுதல், நண்பகல் 12 மணிக்கு கோயில் முன்பு பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன் வீதி உலா வந்தார். வீதியுலாவின் போது கிராம மக்கள் புலி ஆட்டம், கோலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. அது சமயம் விரதமிருந்த பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

The post (வேலூர்)சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பொன்னியம்மன் வைகாசி மாத பிரம்மோற்சவம் appeared first on Dinakaran.

Tags : Velur ,Ponniamman ,Vaikasi month Brahmotsavam ,Ponnai ,Ponniyamman ,Ponnai village ,Vellore ,
× RELATED (வேலூர்) வனப்பகுதிகளில் உள்ள...