×

பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது

 

விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் அருகே, பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே சிவகாசி ரோடு வெள்ளூர் விலக்கில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்றிருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற அமத்தூர் போலீசார், அவரிடம் இருந்த மூடையை சோதனையிட்டனர். அதில் 15 குரோஸ் பட்டாசு திரிகளை அவர் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கவுண்டம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர். அதேபோல், மூளிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் நின்றிருந்த திருத்தங்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரை ஆமத்தூர் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த கைப்பயில் 5 குரோஸ் பட்டாசு திரிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திரிகளை பறிமுதல் செய்த போலீசார், ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

The post பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Sivakasi Road Velur ,AMATUR POLICE ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...