சென்னை: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-24ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24 முதல் பெறப்பட்டு வருகிறது. கடைசி தேதி 20.6.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 134 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் onlineitiadmission@gmail.com மற்றும் 9499055612 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
