×

கம்பத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

 

கம்பம், ஜூன் 5: கம்பத்தில் ஆசிரியர்களுக்கு புதிய கல்வியாண்டில் 4,5 வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.தமிழகத்தில் பள்ளி ஆண்டு விடுமுறை முடிந்து ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு ஒன்று, இரண்டு, மூன்று வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் கல்வி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதிதாக வரும் கல்வியாண்டில் 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முறையினை தமிழ்நாடு அரசு கொண்டு வருகிறது. இதனையொட்டி கம்பத்தில் ஆசிரியர்களுக்கு அதற்கான பயிற்சிகள் கடந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. பயிற்சியில், புதிய உத்திகள், புதிய பயிற்சி முறைகள், கலைவடிவில், எழுத்து வடிவில், கதைகள் வடிவில், பாடல்கள் வடிவில், நடிப்பு வடிவில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது.

கம்பத்தில் நடைபெற்ற இந்த பயிற்சிகளை மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி பார்வையிட்டார். தலைமை ஆசிரியர்கள் சிவாஜி, குட்டியம்மாள், கனிமொழி, இராமச்சந்திரன் மற்றும் கம்பம் ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் சவுந்தரராஜன், விரிவுரையாளர் நாகஜோதி, வட்டார கல்வி அலுவலர் மகாலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதாராணி செய்திருந்தனர்.

The post கம்பத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Gampam ,Dinakaran ,
× RELATED கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்...