×

சாலையில் வளர்ந்துள்ள முட்புதர்களால் விபத்து அபாயம்

 

தேவாரம், ஜூன் 5: தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி, தே.சிந்தலைசேரி, நுழைவு பாதைகளில் இருக்கும் சாலைகளில் மணல்மேடுகளாக காட்சியளிக்கின்றன. மேலும் அதில் சாலையோரமாக செடிகள் அதிகமாக வளர்ந்து புதராக மாறியுள்ளது. சாலையோரத்தில் முளைத்துள்ள முட்புதர்களால் முதியோர், பெண்கள், மாணவியருக்கு இரவு நேரங்களில் நடந்து சென்றால் ஒதுங்கிட முடியாத நிலை உள்ளது.

இரவில் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கிராமசாலைகள், மாவட்ட சாலைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்து பாதுகாப்பு வசதி ஏற்படுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post சாலையில் வளர்ந்துள்ள முட்புதர்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Devaram ,Gompai ,Meleschinthalaisery ,Thammanayakanpatti ,Lakshmi Nayakkanpatti ,De.Chinthalaisery ,Dinakaran ,
× RELATED தேவாரம் பகுதியில் குப்புற கவிழ்ந்த குண்டு மிளகாய் விவசாயம்