×

கமுதி தாலுகா அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம்

 

கமுதி, ஜூன் 5: கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை முதல் ஜமாபந்தி துவங்குகிறது என்று வட்டாட்சியர் தெரிவித்தார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன் கூறும்போது, கமுதி தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை முதல் 14-ம் தேதி வரை பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாளை அபிராமம் உள்வட்ட பகுதிகளுக்கும், 7-ம் தேதி கமுதி கிழக்கு உள்வட்ட பகுதிகளுக்கும், 8-ம் தேதி கமுதி மேற்கு உள்வட்ட பகுதிகளுக்கும், 9-ம் தேதி கோவிலாங்குளம் உள்வட்ட பகுதிகளுக்கும், 14-ம் தேதி பெருநாழி உள் வட்ட பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும் தீர்வாய கணக்குகள் முடிக்கும்படி நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கமுதி தாலுகா அலுவலகத்தில் நாளை ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Jamapandi ,Kamuti ,Thaluka ,Kamuti Vocateur Office ,Votsier ,Jamapandhi ,Kamudi ,Kamuti Thaluka ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் –...