×

சில்லி பாய்ன்ட்

* ரியல் மாட்ரிட் கால்பந்து அணிக்காக தொடர்ந்து 14 ஆண்டுகளாக விளையாடி வந்த நட்சத்திர வீரர் கரிம் பென்சிமா (35 வயது, பிரான்ஸ்), அந்த அணியின் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரொனால்டோவை போல இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு கால்பந்து கிளப் அணிக்காக மிகப் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார்.

* ஸ்பானிஷ் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில் ரெட் புல் ரேசிங் அணியின் நடப்பு உலக சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (25 வயது, நெதர்லாந்து) முதலிடம் பிடித்தார். மெர்சிடிஸ் நட்சத்திரங்கள் லூயிஸ் ஹாமில்டன், ஜார்ஜ் ரஸ்ஸல் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்தனர்.

* ஜெர்மனியில் நடக்கும் ஐஎஸ்எஸ்எப் உலக ஜூனியர் துப்பாக்கிசுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு குழு பிரிவில், இந்தியாவின் கவுதமி பனோட் – அபினவ் ஷா இணை தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கம் இது.

* ஆசிய யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா நேற்று 2 தங்கம், ஒரு வெண்கலம் வென்று அசத்தியது. ரெஸோனா மாலிக் ஹீனா மகளிர் 400 மீட்டர் ஓட்டத்திலும், பரத்பிரீத் சிங் ஆண்கள் வட்டு எறிதலிலும் தங்கப் பதக்கங்களை வசப்படுத்தினர். மகளிர் 5,000 மீட்டர் பந்தயத்தில் அன்டிமா பால் வெண்கலம் வென்றார்.

The post சில்லி பாய்ன்ட் appeared first on Dinakaran.

Tags : Karim Benzema ,Real Madrid football team ,Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!