
- தாய்லாந்து ஓப்பன் பேட்மிண்டன்
- சென்
- பாங்காக்
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்
- இந்தியா
- லக்ஷ்யா சென்
- தாய்லாந்து ஓப்பன் பேட்மிண்டன்
- சென்
- தின மலர்
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் லக்ஷியா சென் போராடி தோற்றார். அரையிறுதியில் தாய்லாந்து வீரர் விதித்சரன் குன்லாவுத்துடன் (22 வயது, 5வது ரேங்க்) நேற்று மோதிய லக்ஷியா சென் (21 வயது, 23வது ரேங்க்) முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். கடும் போராட்டமாக அமைந்த 2வது செட்டை விதித்சரன் 21-17 என்ற கணக்கில் கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது.
3வது செட்டின் தொடக்கத்தில் லக்ஷியா புள்ளிகளை குவித்து முன்னேறினாலும், அதிரடியாக விளையாடி பதிலடி கொடுத்த விதித்சரன் 13-21, 21-17, 21-13 என்ற செட் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. நடப்பு சீசனில் முதல் முறையாக ஒரு தொடரின் அரையிறுதி வரை முன்னேறி இருந்த லக்ஷியா, பைனலுக்கு தகுதி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
The post தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ‘சென்’றார் வெளியே appeared first on Dinakaran.