ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1600 இடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மொத்த இடங்கள்: 1600.
பணியிடங்கள் விவரம்
1. Lower Division Clerk/Junior Secretariat Assistant. சம்பளம்: ரூ.19,900- 63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி.
2. Data Entry Operator/ Data Entry Operator (Grade-A). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Data Entry Operator Grade-A பணிக்கு மட்டும் கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி. இப் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.8.2023 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விதவைகள்/ விவாகரத்து பெற்றவர்களில் எஸ்சி/எஸ்டி எனில் 45 வயது வரையிலும், இதர பிரிவினர்களுக்கு 35 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். எஸ்எஸ்சியால் நடத்தப்படும் Combined Higher Secondary Level தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கொண்ட 2ம் கட்ட தேர்வு நடைபெறும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.ssc.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.6.2023
The post ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 1600 இடங்கள் : எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.