×

சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா குழுமம் நகைகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரூ.ரூ.3986 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுரானா நிறுவனத்துக்கு எதிராக பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் ரூ.124 கோடி மதிப்புள்ள 78 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில் ரூ.113 கோடி சொத்தும், டிசம்பரில் ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டது. தற்போது வரை சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் என மொத்தம் ரூ.248 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

The post சுரானா குழுமத்தின் ரூ.124 கோடி சொத்துக்கள் முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Surana Group ,New Delhi ,Chennai ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...