சேலம்: சேலம்- வீரபாண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து சேலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்த வாலிபர், கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்த சிவா (21) என்பதும், இவர் சேலம் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர் வடலூரில் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
The post காதலிக்கு திருமணம் தண்டவாளத்தில் தலை வைத்து இன்ஜினியர் தற்கொலை appeared first on Dinakaran.