×

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம்: புகழ் பெற்ற ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு 13/06/2023 அன்று (செவ்வாய் கிழமை) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 24/6/23 அன்று (சனிக்கிழமை) வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று “உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 24.06.2023 அன்று சனிக்கிழமையினை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 24.06.2023 அன்று வழக்கம்போல் இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறை நாள் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Erwadi Dharha Chandanarudu festival ,Ramanathapuram ,Ramanathapuram district ,Erwadi Tarha Chandanaru festival ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் ஆஜராகாத தாம்பரம்...