×

உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு யுஜிசி – நெட் தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்/ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பாக பணியில் சேரலாம்.

தேர்வு: UGC- NET EXAM (June-2023).

தகுதி: கலை/அறிவியல்/மேலாண்மையியல்/மானுடவியல் போன்ற துறையைச் சார்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் நெட் தேர்வு நடைபெற்ற தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.எஸ்சி/எஸ்டி/ஒபிசி கிரிமீலேயர் அல்லாத பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நெட் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: நெட் தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிய விரும்புபவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு கிடையாது. ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத் திறனாளிகள்/ டிரான்ஸ் ஜென்டர் பிரிவினர்களுக்கு 5 வருட சலுகை வழங்கப்படும். வயது வரம்பானது 01.06.2023 தேதியின்படி நிர்ணயிக்கப்படும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.1150/-. ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ₹600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.325/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

நெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. தாள்-1 ல் விண்ணப்பதாரரின் கற்பிக்கும் திறனை பரிசோதிக்கும் வகையில் 50 கேள்விகள் கேட்கப்படும். 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கான நேரம் 1 மணி நேரம் ஆகும். தாள்-2ல் விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் முக்கிய பாடப்பிரிவுகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வுக்கான நேரம் 2 மணி நேரம் ஆகும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், கடந்த ஆண்டில் நடந்த தேர்வுகளின் மாதிரி வினாத்தாள் ஆகியவை யுஜிசி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை, நீலகிரி, வேலூர், விழுப்புரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சை ஆகிய மையங்களில் ஜூன் 13 முதல் 22ம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் www.ugcnet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.05.2023

The post உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு யுஜிசி – நெட் தேர்வு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UGC – NET ,National Selection Board ,Human Resource Development Department ,Union Government… ,Dinakaran ,
× RELATED யுஜிசி-நெட் தேர்வுகள் ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு..!!