சென்னை: சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வது ஏற்புடையதல்ல என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நாளை முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம். டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்வோம் என கூறினார்.
The post சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வது ஏற்புடையதல்ல; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.
