×

30 வருஷ உழைப்புக்கு நல்ல பினிஷ் கிடைத்தது: ராயுடு

இந்த சீஷனுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, மும்பை அணியுடன் 3 முறை, சிஎஸ்கே அணியுடன் 3 முறை என 6வது முறையாக கோப்பையை வெல்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஒரு கனவு மாதிரியான ஃபினிஷ். இதற்கு மேல் வேறு எதையும் நான் கேட்க முடியாது. என்னால் இதனை நம்பவில்லை. ஐபிஎல் வரலாறு முழுவதும் சிறந்த அணிக்காக நான் விளையாடியதை பெருமிதமாக கருதுகிறேன். குறிப்பாக இந்த வெற்றியை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது.

ஏனெனில் கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து கிரிக்கெட்டை பற்றியே சிந்தித்து வரும் எனக்கு மிகச்சிறந்த பினிஷ் கிடைத்திருக்கிறது. இத்தனை வருடங்களாக எனக்கு பக்க பலமாக இருந்தவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக எனது குடும்பம் மற்றும் எனது தந்தைக்கு இதை சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால் இவ்வளவு தூரம் சாத்தியமாகி இருக்காது” என்றார்.

The post 30 வருஷ உழைப்புக்கு நல்ல பினிஷ் கிடைத்தது: ராயுடு appeared first on Dinakaran.

Tags : rayudu ,Ambatti Rayudu ,IPL ,Mumbai ,CSK ,Dinakaran ,
× RELATED இன்று முதல் பெங்களூரில் பெண்கள் ஐபிஎல் டி20 தொடக்கம்