×

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கீர்த்திகா மற்றும் ஹரிப்பிரியா நீக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்ட, ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கள்ளிக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 16, ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து, மாணவி தாயார் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது நபர் கார்த்திகா, 2 வது நபர் ஹரிப்பிரியா வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது .

ஆட்சோபனை இருந்தால் வரும் 5ம் தேதிக்குள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் விசாரணை குழு அமைத்து விசாரிக்க கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக ஸ்ரீமதி தாய் செல்வி பேட்டி அளித்துள்ளார்.

The post கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட கீர்த்திகா மற்றும் ஹரிப்பிரியா நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Keertika ,Hribiriya ,Srimathi ,Kolakkuruchi ,Jamin ,Srimati ,Kiertika ,Haribiriya ,
× RELATED பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி...