×

பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வீட்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

கடலூர்: பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் குழந்தைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மற்றும் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரித்து வருகின்றனர்.கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி கனியமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரியளவிலான கலவரம் வெடித்து பள்ளி சூறையாடப்பட்டது.இந்நிலையில் மாணவி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டனர்.அந்த விசாரணையில், பள்ளியிலுள்ள விடுதி அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், பள்ளிகளில் உள்ள விடுதிகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்த நிலையில் கனியமூர் தனியார் பள்ளியில் உள்ள விடுதி அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்தது.இந்நிலையில் இன்று, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் 7 பேர் கொண்ட குழு மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் மாணவி இறந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பெரியநெசலூரில் உள்ள கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி வீட்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : National Children's Rights Protection Commission ,Srimathi ,Periyanesalur ,Cuddalore ,Children's Commission ,Kakkurichi ,National Child Rights Protection Commission ,Srimati ,
× RELATED பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம்...