×

ஈரோடு, தி.மலையில் சூறாவளி காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!: விவசாயிகள் வேதனை.. இழப்பீடு வழங்க கோரிக்கை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றில் சுமார் 500 வாழைமரங்கள் முறிந்து சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. சூறாவளி காற்றில் கடுகான்பாளையம், தோட்டக்காட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, நேந்திரன், கதளி உள்ளிட்ட ரகத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. ஒரு வாழைக்கு சுமார் 150 முதல் 200 ரூபாய் வரை செலவு செய்த நிலையில், சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சூறாவளி காற்றால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. கொட்டாவூர், பரமானந்தல், குப்பநத்தம், ஊர்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று வீசிய சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தன. சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஈரோடு, தி.மலையில் சூறாவளி காற்றால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!: விவசாயிகள் வேதனை.. இழப்பீடு வழங்க கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Erode, The ,Erode ,Kobi, Erode district ,Erode, ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது