×

சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது

ஈரோடு, மே 14: சட்டவிரோத மது விற்பனை செய்தது தொடர்பாக பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளதோடு மது பாட்டில்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், சட்டவிரோத மது விற்பனை மேற்கொள்வதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ஈரோடு தாலூகா போலீசார் நேற்று முன்தினம் நடத்திய ரெய்டில் பச்சப்பாளி டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வீரப்பன்சத்திரம், மணிமேகலை வீதியை சேர்ந்த சிவக்குமார் (55) என்பவரை கைது செய்தனர்.

அம்மாபேட்டை அடுத்துள்ள சுந்தராம்பாளையம் பள்ளத்தில் மது விற்ற சித்தையன் (59), சித்தோடு பெருமால் மழை பஸ் ஸ்டாப் அருகே மது விற்ற ஜான் (63), அந்தியூரை சேர்ந்த பிரகாஷ் (24), கோபி அடுத்துள்ள கூகலூர் தாளக்கொம்புபுதூர் சின்னசாமி மனைவி சின்னபாப்பாள் (54), சென்னிமலை காந்தி நகரை சேர்ந்த பூவரசன் (26), தாளவாடி, திகினாரையை சேர்ந்த சித்தலிங்கம் (38) ஆகிய 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...