×

புத்திர பாக்கியம் கிடைக்க சங்கர நாராயணர் வழிபாடு..!!

பிரசித்துப்பெற்ற தஞ்சை பெரியக்கோயில் அருகில் புத்திர பாக்கியம் வேண்டி சோழர்களால் கட்டப்பட்ட சங்கர நாராயணரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அரியும் சிவனும் ஒன்று.. அறியாத வாய்ல மண்ணு என்று புரியவைத்த வடிவமே சங்கர நாராயண வடிவம். சைவ, வைணவ ஒற்றுமையை நிலைநாட்டும் மூர்த்தியாக விளங்குகிறார். புண்ணியமிகுந்த புரட்டாசி மாதத்தில் சங்கர நாராயண இணைவாக கருதப்படும் சிவப்பெருமானையும், மகாவிஷ்ணுவையும் ஒருங்கே வழிப்படுவது சிறப்பாகும்.

சூரியபகவானுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான் ஆவார். புதன் பகவானுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன் ஆவார். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற காரணமும் இதுவேயாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பீம சோழன் என்ற மன்னனால் கட்டப்பட்டது சங்கர நாராயண திருக்கோயில். புத்திரப்பாக்கியம் கிட்டவில்லை என்ற ஏங்கிய மன்னனுக்கு சிவப்பெருமானே அசிரிரீயாக காட்சியளித்து கட்டப்பட்ட தலம். பிரகதீஸ்வர் கோயிலுக்கும், கொங்கனேஷ்வரர் கோயிலுக்கும் இடையில் சங்கர நாராயணர் என்ற பெயரில் எனக்கும் விஷ்ணுவுக்கும் இணைந்து கோயில்கட்ட வேண்டும்.

நான் அங்கு லிங்க ரூபமாக இருக்கிறேன். இக்கோயிலை கட்டினால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்று சொல்லி மறைந்தார். சிவப்பெருமான் வாக்கின்படி, மன்னன் இக்கோயிலை கட்டி முடித்தவுடன் அழகான ஆண்மகன் பிறந்தான்.

இத்திருத்தலத்தில், சங்கர நாராயணர் வலப்புறம் சிவமாகவும், இடப்புறம் திருமாலாகவும் அருள் காட்சியளிக்கிறார். ஓரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகர குண்டலம், ரூத்ராட்ச மாலை, மழு, அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவப்பெருமான் வடிவமாக உள்ளது.

இடப்பக்கம், கீரிடம், திருநாமம், திருவாபரணங்கள், சங்க ஹஸ்தம், பஞ்சகச்சம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் திகழ்கிறார். இதற்கேற்ப பார்வதி, லட்சுமி உருவங்களுடன் காட்சியளிக்கிறார் சங்கர நாராயணர்.

The post புத்திர பாக்கியம் கிடைக்க சங்கர நாராயணர் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Sankara Narayan ,Cholas ,Thanjai Periyakoil ,
× RELATED இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…