×

ஜெகன் அண்ணா 1902 கால் சென்டர் மூலம் சரியான நேரத்தில் பதில் அளித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும்

*அரசு தலைமைச் செயலர் மெய்நிகர் முறையில் ஆலோசனை

திருப்பதி : ஜெகன் அண்ணா 1902 கால் சென்டர் மூலம் சரியான நேரத்தில் பதில் அளித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு தலைமை செயலர் மெய்நிகர் முறையில் ஆலோசனை வழங்கினார். ஆந்திர மாநில அரசு தலைமைச் செயலர் ஜவஹர், மெய்நிகர் முறையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், திருப்பதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் வெங்கட ரமணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: குடும்ப மருத்துவர் கான்செப்ட் வாகனம் மாதத்திற்கு இரண்டு முறை தொலைதூர பகுதிகளுக்கு சென்று மருத்துவ சிகிச்சை செய்து வரவேண்டும். கண்பார்வை தொடர்பான பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் கண்ணாடிகள் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர்.ஆரோக்யஸ்ரீ திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஏ.என்.எம்.க்கள் சென்று விவரங்கள் சேகரித்து ஏ.என்.எம்., ஆப்-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கர்ப்பிணிகளுக்கான பிறப்பு திட்டமிடல் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் இருக்க வேண்டும்.

ஜூன் 12ல் பள்ளிகள் துவங்குகிறது. கழிவறை, குடிநீர், மின்சாரம், சமையல் கூடம் கட்டும் பணி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பெறப்படும் பொருட்களை, மண்டல மையங்களில் சேமித்து, மக்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் தரத்தை சரிபார்க்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் ஜெகன்னா கல்வி பரிசு பெட்டி தயார் செய்து, பள்ளி துவங்கும் முன், மண்டல மையங்களில் இருந்து வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார். ஆர்வமில்லாத குழந்தைகளுக்கு கட்டாய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும்.

ஜெகன் அண்ணா 1902 கால் சென்டர் மூலம் சரியான நேரத்தில் பதில் அளித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என மாநில அரசு தலைமைச் செயலர் ஜவஹர் கூறியுள்ளார். எனவே, ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தங்கள் உள்நுழைவை இரண்டு முறை சரிபார்த்து கோரிக்கைகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ஜெகன் அண்ணா 1902 கால் சென்டர் மூலம் சரியான நேரத்தில் பதில் அளித்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Jagan Anna 1902 ,Chief Secretary ,Tirupati ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...