×

16 வகை சிறப்பு அம்சங்கள் உள்ளதா? தனியார் பள்ளி வாகனங்களை அமைச்சர் ஆய்வு

நாகப்பட்டினம், மே26: நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று நடந்தது. கலெக்டர் பொறுப்பு ஷகிலா தலைமை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் ஆய்வுகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்எல்ஏ நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 41 தனியார் பள்ளிகள் உள்ளது. 135 வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில் 106 வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு வந்தது.

பள்ளி குழந்தைகள் எளிதாக ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? புத்தக பைகள் வைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? இருக்கைள் வசதியாக அமைக்கப்பட்டுள்ளதா? வாகனத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதா? வாகனத்தின் பின்புறம் பள்ளியின் தொலை பேசி எண், வட்டார போக்குவரத்து அலுவலக தொலைபேசி எண், அவசர அழைப்பு எண்கள் எழுதப்பட்டுள்ளதா என்பது உட்பட 16 வகையான சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

சப் கலெக்டர் பானோத்ம்ருகேந்திரர்லால், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post 16 வகை சிறப்பு அம்சங்கள் உள்ளதா? தனியார் பள்ளி வாகனங்களை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam Armed Forces Ground ,Shakila Chief… ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு