×

பவானிசாகர் அணை பூங்கா சுற்றுச்சுவரை உடைத்த காட்டு யானை

சத்தியமங்கலம்,மே26: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணை பூங்கா மற்றும் அரசு போக்குவரத்து கழக பயிற்சி பள்ளி பகுதிகளில் இரவில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அரசு ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் முன்புற நுழைவு வாயில் கேட் மற்றும் காம்பவுண்ட் சுவரை காட்டு யானை உடைத்து சேதப்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் அணை பூங்கா பகுதிக்கு வந்த காட்டு யானை பூங்காவின் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது.
பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் கிராமத்திற்கு சென்ற காட்டு யானை அப்பகுதியில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான சுற்றுச்சுவரையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளது.பவானிசாகர் அணை பகுதியில் தினமும் இரவில் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இரவு நேரத்தில் பவானிசாகர் அணை பூங்கா பகுதியில் நடமாடும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநாள் ராஜா 06,07 ஈரோடு ஆர்.கே.வி.சாலையில் கழிவுநீர் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

சோபகிருது வருடம் வைகாசி மாதம் 12-ம் நாள்.
வௌ்ளிக்கிழமை. வளர்பிறை.
திதி: சப்தமி நாள் முழுவதும்.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.50 மணி வரை; அதன் பிறகு மகம்.
யோகம்: மரண யோகம்.
நல்ல நேரம்: காலை 10.00 – 10.30; மாலை 4.30 – 5.30.
ராகு காலம்: காலை 10.30 – 12.00 மணி வரை.
எமகண்டம்: மாலை 3.00 – 4.30 மணி வரை.
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.
சூலம்: மேற்கு; பரிகாரம்: வெல்லம்.

பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு: 485 பேர் பங்கேற்பு
ஈரோடு,மே26:ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த 485 பேரும், பங்கேற்றனர். இதனால், முதன்மை கல்வி அலுவலகம் வளாகத்தில் ஆசிரியை, ஆசிரியர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

The post பவானிசாகர் அணை பூங்கா சுற்றுச்சுவரை உடைத்த காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam park ,Sathyamangalam ,Sathyamangalam Tiger Reserve ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...