×

சித்தராமையாவுக்கு மிரட்டல் பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு

மைசூரு: முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக பேசிய பாஜ முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது பிப்ரவரி 10ம் தேதி மைசூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பாஜ அமைச்சர் அஸ்வத்நாராயணா, 18ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானை உரி கவுடா, நஞ்சே கவுடா ஆகியோர் எப்படி ஒழித்தார்களோ அது போன்று சித்தராமையாவை ஒழித்துவிடுவோம் என்று பேசினார்.

இந்த சர்ச்சை பேச்சு குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லக்‌ஷ்மண் மைசூரு தேவராஜ போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார் சித்தராமையாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜ முன்னாள் அமைச்சர் அஸ்வத்நாராயண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post சித்தராமையாவுக்கு மிரட்டல் பாஜ மாஜி அமைச்சர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sidderamaiah ,Minister ,Baja ,Maji ,Mysore ,Chief Minister ,Sidderamiya ,Karnataka ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு