×

நிலம் எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது நெல்லையில் சுற்று வட்டச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நெல்லை, மே 23: நெல்லையில் சுற்று வட்டச் சாலை பணிகள் விரைவில் துவங்கும். இதற்கான நிலம் எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என நெல்லையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தென்னகத்தில் முதன்முதலாக நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைத்தவர் கலைஞர். அந்த ஈரடுக்கு ேமம்பாலம் சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. தற்போது கல் விழுந்து ஒருவர் இறந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து அதன் உறுதித் தன்மையை தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களிடம் சோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டது. எனினும் நெல்லையில் புகழ்பெற்ற ஈரடுக்கு மேம்பாலம் பாரம்பரிய கட்டுமானம் ஆகும். ஒரு பணியை புதுப்பிக்கும் போது எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எனவே திருத்திய மதிப்பீடு தயார் செய்வது உண்டு. அதன் அடிப்படையில் பாலம் பணிகள் முடிக்கப்படும். நெல்லை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுற்று வட்டச் சாலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சுற்று வட்டச் சாலை அமைப்பது குறித்து நெல்லையில் நெடுஞ்சாலைத்துறை மண்டல ஆய்வுக் கூட்டம் நடத்திய போது ஆய்வு நடத்தினேன். நெல்லை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். சுற்று வட்டச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சுற்று வட்டச் சாலை அமைக்கும் பணிகள் முன்னுரிமை அளித்து விரைவில் தொடங்கப்படும். பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் ஜெர்மன் செட் அமைக்கப்பட்டிருந்தது. மழையினால் சரிந்து விழுந்ததாக அறிந்தேன். 2 நாட்களில் இதை சீரமைப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

அன்பு நகர் பாலத்தில் ஆய்வு
பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் மகாராஜநகரையும் – தியாகராஜநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அன்பு நகர் ரயில்வே ேமம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். பின்னர் குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியையும் ஆய்வு செய்தார். அது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

The post நிலம் எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது நெல்லையில் சுற்று வட்டச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும் அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nelli ,Vattachalai ,Minister A. Etb ,Velu ,Paddy ,Minister ,A. Etb ,Dinakaran ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...