×

பெங்களூரு புகழேந்தி கார் மீது தாக்குதல் எடப்பாடி மீது கொலை மிரட்டல் புகார்

சேலம்: பெங்களூரு புகழேந்தி கார் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 4 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் ஆலோசனை கூட்டம் கடந்த 19ம் தேதி நடந்தது. இடைப்பாடியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு சென்ற அந்த அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தியின் கார் மீது தாக்குதல் நடந்தது. ஆபாசமாக சிலர் பேசி கார் கண்ணாடியை கையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கார் கண்ணாடியை தாக்கும் வீடியோ சேலத்தில் வைரலானது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், இடைப்பாடி போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக்கிணங்க இடைப்பாடியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

இதையறிந்த எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த நகர செயலாளர் முருகன் பல வழிகளில் என்னை மிரட்டினார். கூட்டத்திற்கு வருபவர்களையும் மிரட்டினார். கூட்டம் முடிந்து நிர்வாகிகள் வெளியே சென்ற நேரத்தில் ஆடவத்தூர் செல்வம் தலைமையில் 10 பேர் எங்களது கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தியின் காரை மறித்து அவரை அடிக்க முயன்றனர். இவனை கொல்ல வேண்டும் எனக் கூறி ஆபாசமான வார்த்தைகளால் பேசி காரை நிறுத்தி கண்ணாடியை அடித்தனர். இதனை கேள்விப்பட்டு ஓடிவந்தேன். அப்போது எனக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன் அடிக்கப் பாய்ந்தனர். அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இவை அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின்பேரில் முருகன், ஆடவத்தூர் செல்வம் மற்றும் அவர்களின் அடியாட்கள் செய்தனர். இவர்களால் எனது உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளது. எனவே திட்டதிட்டு கலவரத்தை உண்டாக்கிய அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். புகாரை பெற்றுக்ெகாண்ட அதிகாரிகள், அதற்கான ரசீதை கொடுத்து விசாரித்து வருகின்றனர். இதே போல பெங்களூரு புகழேந்தி, தமிழக டிஜிபி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஆகியோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், ‘எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

The post பெங்களூரு புகழேந்தி கார் மீது தாக்குதல் எடப்பாடி மீது கொலை மிரட்டல் புகார் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Edapadi ,Salem ,Palanisamy ,Phajendi ,Edabadi ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்