×

திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் அமெரிக்க டாலர் பறிமுதல்

திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியின் உடைமைகளை செய்தபோது, அவர் வைத்திருந்த கைப்பையில் 170 அமெரிக்க டாலர்கள் இருப்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு 10 லட்சத்து 27 ஆயிரத்து 530 ரூபாய் ஆகும். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி ஏர்போர்ட்டில் பயணியிடம் அமெரிக்க டாலர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Air Asia ,Kuala Lumpur ,Trichy International Airport ,Trichy Airboard ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு