×

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி 100 சதவீத தேர்ச்சி

நெல்லை, மே 20: எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இத்தேர்வில் மகாராஜநகர் ஜெயேந்திரா வெள்ளி விழா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 219 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சியை எட்டியது. இதில் மாணவி அபிராமி 495 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி ஆர்த்தி மதி 493 மதிப்பெண்களும், ஜெயநந்தினி 490 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனர். கணித பாடத்தில் 21 பேரும், அறிவியலில் 12 பேரும், சமூக அறிவியலில் 2 பேரும் 100 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

The post எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : SSLC Public Thuram ,Maharajanagar Jayendra School ,Paddy ,SSLC Public Tsar ,Maharajanagar Jayendra ,India ,SSLC Public Development Maharajanagar Jayendra School ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...