×

தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் சிலை திறப்பு

 

ஊட்டி, மே 20: ஊட்டி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் சிலை திறக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கடந்த 175 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர்கள் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. துவக்கத்தில் காய்கறி தோட்டமாக இருந்த 5.5 ஏக்கர் நிலம் பின் பூங்காவாக உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவை மெக் ஐவர் என்பவரால் துவக்கப்பட்டது. இவரது கல்லறை ஊட்டியில் உள்ள ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் உள்ளது. ஆண்டுதோறும் இவரது நினைவு தினத்தின் போது, ஊட்டி தாவரவியல் பூங்கா சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரை கவரவிக்கும் வகையில் ஊட்டி 200 விழாவின் ஒரு பகுதியாக அவருக்கு தாவரவியல் பூங்காவில் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்தது. விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவரின் சிலை திறப்பு appeared first on Dinakaran.

Tags : McIver ,Botanical Gardens ,Ooty ,Meg Iver ,Ooty Botanical Gardens ,Ooty Govt Botanic… ,Botanic Garden ,
× RELATED சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதியில்லை: கண்ணாடி மாளிகை மீண்டும் திறப்பு