×

ஈரோடு மாவட்டத்தில் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜமாபந்தி

 

ஈரோடு,மே20: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும்,வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி,ஈரோடு,நம்பியூர் தாலுகாக்களில் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும், தாளவாடி தாலுகாவில் 25ம் தேதியும், அந்தியூர் தாலுகாவில் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும்,கோபி,சத்தியமங்கலம்,பெருந்துறை தாலுகாக்களில் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு விடுமுறை நீங்கலாக) அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை, அந்தந்த பகுதியில் பங்கேற்கும் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) அலுவலர்களிடம் வழங்கி உரிய நிவாரணம் பெறலாம்.

The post ஈரோடு மாவட்டத்தில் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜமாபந்தி appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Erode district ,Erode ,Jamabandi ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...