×

மதுரை தெற்கு மாவட்டத்திற்கான திமுக நெசவாளர், சிறுபான்மை அணி அமைப்பாளர்கள் நியமனம்

திருமங்கலம், மே 20: மதுரை தெற்கு மாவட்ட திமுக நெசவாளர், சிறுபான்மையினர், மற்றும் ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறன் பரிந்துரையில் நியமிக்கப்பட்டுள்ள அணி அமைப்பாளர்களின் விவரங்கள் வருமாறு: நெசவாளர் அணி தெற்கு மாவட்ட தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் கரிகாலன். இந்த அணி அமைப்பாளராக உலகநாதபாண்டியன், துணை அமைப்பாளர்களாக ஜெயராமன், அறிவரசன், சின்னன், சத்தியமூா்த்தி, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் தலைவராக முகமது மைதீன், துணைத்தலைவராக அப்துல்ரகீம் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மை அணியின் அமைப்பாளராக மொகைதீன்பிச்சை மற்றும் துணை அமைப்பாளர்களாக முகமது சிக்கந்தர், ரிட்டர்சன், சித்திக்சிந்தா, ராஜா முகமது, சையத்சுல்தானா பாஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிதிராவிடர் நலக்குழு தெற்கு மாவட்ட தலைவராக ஆறுமுகம், துணைத்தலைவராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அமைப்பாளராக பரமசிவம் மற்றும் துணை அமைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன், சுப்பையா, ரவிசந்திரன், தா்மலிங்கம், சுரேந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மதுரை தெற்கு மாவட்டத்திற்கான திமுக நெசவாளர், சிறுபான்மை அணி அமைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : DMK Weaver ,Madurai ,South District ,Tirumangalam ,Minorities ,Adi Dravida ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை