×

கிச்சன் டிப்ஸ்

 

* ஜவ்வரிசி வடாம் செய்ய தண்ணீர் கொதிக்கும்போது சிறிதளவு சீஸைத் துருவி சேர்த்தால், வடாம் காய்ந்ததும் பொரிக்கும்போது நல்ல சுவையுடன் இருக்கும்.
* இட்லி மாவு உளுந்து பற்றாக்குறையால் கெட்டியாகிவிட்டால். பொரிக்காத அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒருநிமிடம் அரைத்து இட்லி மாவுடன் கலந்தால், இட்லி பஞ்சுபோல் இருக்கும்.
* வேக வைத்த பயத்தம் பருப்போ, துவரம் பருப்போ மீந்துவிட்டால் அவைகளை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்ய, வித்தியாசமான சுவையில் இருக்கும்.
* முளைகட்டிய கொண்டைக்கடலையை அரைத்து சப்பாத்தி செய்தால் சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.
* காய்கறிகளை வறுவல் செய்யும்போது, எண்ணெய் சூடாகும் சமயத்தில் ஒருசிட்டிகை சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் அதன் சுவை சூப்பராக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிரை அரைத் தேக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* இட்லி சுடும்போது மாவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் வரை கெடாமலும் இருக்கும்.
* சப்பாத்தி சுட்டதும், அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சப்பாத்தி நீண்ட நேரத்திற்குச் சூடாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சிப்ஸின் சுவை பிரமாதமாக இருக்கும். சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் சிக்கிரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

– ஆர். கீதா, அலுவா.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Javarisi ,
× RELATED சேலம் ஜவ்வரிசிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும்