×

கோடை வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்

சென்னை: கோடை வெப்பத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கோடை வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தை எதிர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணம் மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெப்ப அலை தாக்கத்திற்கு உள்ளாவோருக்கு சிகிச்சை தர தேவையான மருந்துகளை இருப்பு வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தேவையான குடிநீர், நிழற்கூடங்கள், தீவனம் மற்றும் மருத்துவ வசதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கோடை வெயிலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு ஓஆர்எஸ் இருப்பு வைக் appeared first on Dinakaran.

Tags : ORS ,Chennai ,Chief Minister ,Mukhera ,G.K. Stalin ,Waik ,Dinakaran ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...