×

மாநகரில் ரூ.62.80 லட்சத்தில் கட்டுமான பணிகள்

 

கோவை, மே 19: கோவை மாநகரில் ரூ.62.80 லட்சத்தில் கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கிவைத்தார். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 3-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. இதேபோல், சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப பள்ளி வளாகத்தில் ரூ.47.80 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், உணவுக்கூடம், கூடுதல் கழிவறைகள் கட்டப்பட உள்ளன. மொத்தம் ரூ.62.80 லட்சம் மதிப்பிலான இந்த கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜையை துவக்கிவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை உடனடியாக புனரமைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். பின்னர், அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு செய்த மேயர், உணவுப்பொருட்களின் விநியோகத்தை சீராக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி, கவுன்சிலர் கவிதா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post மாநகரில் ரூ.62.80 லட்சத்தில் கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mayor ,Kalpana Anandakumar ,Dinakaran ,
× RELATED கோவை முன்னாள் எம்.எல்.ஏ. தா.மலரவன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்..!!