×

தஞ்சை அடுத்த சூரக்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து 147 ஏக்கர் நிலம் மீட்பு..!!

தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த சூரக்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்த ரூ.111 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். சூரக்கோட்டை கிராமத்தில் சுத்தரத்னேஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 147 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததுடன் கோயிலுக்கு குத்தகை தொகையை செலுத்தாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முப்போகம் சாகுபடி செய்து லாபம் ஈட்டிவந்திருக்கின்றனர்.

இதனை கோயில் ஆவணங்களை சரிபார்த்து கணக்கெடுத்தபோது இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தஞ்சை தனி வட்டாச்சியர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதை அடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து நிலத்தை மீட்ட அலுவலர்கள் அந்த நிலம் கோவிலுக்கு சொந்தம் என்பது தொடர்பான அறிவிப்பு பலகையை வைத்தனர். தற்போது மீட்கப்பட்டுள்ள ரூ.111 கோடி மதிப்பிலான இந்த விலை நிலங்களில் குத்தகை முறையில் சாகுபடி செய்திடும் வகையில் ஏலத்திற்கு கொண்டுவர இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post தஞ்சை அடுத்த சூரக்கோட்டையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து 147 ஏக்கர் நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sunakota ,Thanjam ,Thanjavur ,Hindu Religious Fiduciary ,Sunakkota ,Tanjavur ,Suncade of Thanjam ,Dinakaran ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை