×

மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மும்முரம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கோடைமழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி பணி மீண்டும் மும்முரமாக நடந்து வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதியில் ஆண்டுதோறும் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கிறது. 3,000 ஏக்கரில் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் 850 பேர் உணவு உப்பு தயார் செய்து வருகின்றனர். மீதமுள்ள 6,000 ஏக்கரில் கோடியக்காடு, கடினல்வயலில் தொழிற்சாலைகளுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

25 நாட்களுக்கு முன் பருவம் தவறி பெய்த கோடை மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தபட்டது. இதனால் உப்பள தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழந்து வீட்டில் முடங்கினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உப்பள பாத்திகள் சரி செய்யப்பட்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் உப்பு உற்பத்தி பணி துவங்கப்படும். இந்தாண்டு ஜனவரி மாதமே உப்பு உற்பத்தி துவங்கியதால் 6 லட்சம் மெட்ரிக் டன் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

The post மழை ஓய்ந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Vedaravana ,Vedaranakam ,Vedaranam ,Nagai ,Thrimpuram ,
× RELATED வேதாரண்யம் அருகே நடுக்கடலில் வேதை...