×

இறுதிக்கட்ட பரபரப்பில் ஐபிஎல் தொடர்: வாழ்வா-சாவா நிலையில் பஞ்சாப் டெல்லியுடன் இன்று மோதல்!

தர்மசாலா: ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 64வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேபிட்டல்ஸ் மோதுகின்றன. பஞ்சாப் 12 போட்டியில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளியுடன் 8வது இடத்தில் இருக்கிறது. இன்று மற்றும் 19ம் தேதி ராஜஸ்தானுடன் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்று தோற்றால் வெளியேறவேண்டியது தான் என்பதால் வாழ்வா-சாவா நிலையில் களம் இறங்குகிறது.

மறுபுறம் டெல்லி 12 போட்டியில் 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துவிட்டது. இருப்பினும் கடைசி 2 போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்கும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 31 முறை மோதி உள்ளன. இதில் 16ல் பஞ்சாப், 15ல் டெல்லி வென்றுள்ளன.

பிளே ஆப்பிற்கு மல்லுக்கட்டு;
மும்பை: ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் இன்னும் 8 போட்டிகளே உள்ளன. நேற்று லக்னோவின் வெற்றியால் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. கடைசி போட்டியில் 21ம் தேதி சிஎஸ்கே டெல்லியுடன் மோத உள்ளது. இதில் தோற்றாலும் ரன்ரேட் நன்றாக இருப்பதால் வாய்ப்பு கிடைக்கலாம். மும்பை 21ம் தேதி ஐதராபாத்துடன் மோதுகிறது. தற்போதைய நிலையில் ராஜஸ்தான், கேகேஆர் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டன. கடைசி போட்டிகளில் அந்தஅணிகள் வெற்றிபெற்றாலும் வாய்ப்பு கிடைப்பது அரிது தான்.

ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். பெங்களூரு நாளை ஐதராபாத், 21ம் தேதி குஜராத்துடன் மோத உள்ளது. இந்த இரண்டிலும் வென்றால் எளிதாக தகுதி பெறும். குஜராத் மட்டும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இதர 3 இடத்திற்கு சிஎஸ்கே,லக்னோ, மும்பை, ஆர்சிபி, பஞ்சாப், இடையே போட்டி நிலவுகிறது. இன்று பஞ்சாப், நாளை பெங்களூரு தோற்றால் சென்னை, லக்னோவின் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகி விடும்.

The post இறுதிக்கட்ட பரபரப்பில் ஐபிஎல் தொடர்: வாழ்வா-சாவா நிலையில் பஞ்சாப் டெல்லியுடன் இன்று மோதல்! appeared first on Dinakaran.

Tags : IPL series ,Punjab Delhi ,liva-sawa ,Darmasala ,Punjab ,Dawan ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு