×

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கோரிக்கையினை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Shivaji Krishnamurthy ,General Secretary ,Duraimurugan ,Chennai ,DMK ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’