×

பெருமாநல்லூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 பாக்கெட் போதை சாக்லெட்டுடன் பீகார் வாலிபர் கைது

 

திருப்பூர்: திருப்பூர் பொங்கு பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமசிவம் பாளையத்தில் போதை சாக்லெட் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர். ஹேமலதா தலைமையிலான போலீசார் பரமசிவம்பாளையத்தில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு சொந்தமான விடுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இன்டெல் குமார்(26) என்பரவது பையை சோதனை செய்த பொழுது அதில் 150 கிராம் எடை கொண்ட 10 பாக்கெட் போதை சாக்லெட் இருந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் இன்டெல் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த போதை சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர்.

The post பெருமாநல்லூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 பாக்கெட் போதை சாக்லெட்டுடன் பீகார் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perumanallur ,Tirupur ,Paramasivam Palayam ,Tirupur Pongu ,Palayam ,
× RELATED புகையிலை பொருள் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு