×

ஊரக பகுதிகளில் மின் விநியோகம் அதிகரிப்பு தமிழ்நாடு அரசை பாராட்டி ஒன்றிய அமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய சராசரியைவிட உயர்ந்துள்ளது என எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கடந்த மே 11ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-19ம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-22ம் ஆண்டில், அது நாளொன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-19ம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. 2021-22ம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்க ஒன்றிய அரசு உதவிடும்.

The post ஊரக பகுதிகளில் மின் விநியோகம் அதிகரிப்பு தமிழ்நாடு அரசை பாராட்டி ஒன்றிய அமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,Energy Minister ,RK Singh ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...