×

கால்வாயில் கார் கவிழ்ந்து சென்னை சிறுமிகள் பலி

ராணிப்பேட்டை: சென்னை வில்லிவாக்கம் அடுத்த கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாத்(48). கோழி கடை வைத்துள்ளார். இவரது குடும்பத்தினர் அஜமுல் நிஷா(40), முஹம்மது சலிம்(49), தமசுல் பாத்திமா(15), சுமையா(17), ஷாப்பியா(9), வர்ஷானா(21) ஆகிய 7 பேரும் ஆந்திர மாநிலம் வஜ்ரகரூர் பகுதியில் நேற்று முன்தினம் உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் விஜய் என்பவர் ஓட்டினார். ராணிப்பேட்டை அடுத்த பெல் பைபாஸ் சாலையில் நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அப்பகுதியினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தமசுல் பாத்திமா, சுமையா ஆகிய 2 சிறுமிகளும் அங்கேயே உயிரிழந்தனர். மற்ற 6 பேரும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கால்வாயில் கார் கவிழ்ந்து சென்னை சிறுமிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Abdul Rasad ,Kottur ,Villiwakam ,Chennai ,Ajamul ,
× RELATED கோயில் திருவிழாக்களால் செண்டு பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி