×

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கோயம்பேட்டில் உள்ள தனியார் பேருந்து முனையத்தை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற, பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) திட்டமிட்டுள்ளது. கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில், தனியார் பேருந்து முனையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய உள்ளதாக அமைச்சர் சேகர்பாபுதெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஒப்பந்த ஊர்திகள் (ஆம்னி பேருந்துகள்) நிறுத்தத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றி எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதற்குத் தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அருகே கிளாம்பாக்கதில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்து முனையம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் வரும் ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க தனியார் பேருந்து முனையத்தை மாற்றியமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

The post சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம் appeared first on Dinakaran.

Tags : CM ,Coimbed ,Chennai ,Coimbet ,Chennai Ouvatta Road ,Coimbedu ,MM TD PA ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...