×

மீண்டும் இணைந்த சமுத்திரக்கனி, அனன்யா

சென்னை: திரைக்கு வந்த ’ஒரு கல்லூரி யின் கதை’, ‘மாத்தி யோசி’, ‘அழகன் அழகி’, ‘வண்ண ஜிகினா’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ ஆகிய படங்களை இயக்கியவரும், நடிகருமான நந்தா பெரியசாமி இயக்கும் படத்தில் சமுத்திரக் கனி ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அனன்யா, பாரதிராஜா, நாசர் நடிக்கின்றனர். திரில்லர் கதை கொண்ட இதன் படப்பிடிப்பு கேரள எல்லையில் அமைந்துள்ள மேகமலை, குமுளி, மூணாறு ஆகிய பகுதிகளில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது. எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் பாடல்கள் எழுதுகின்றனர்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தின் மூலம் ‘நாடோடி கள்’ என்ற படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி, அனன்யா மீண்டும் இணைந்துள்ளனர். தவிர ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிக்கும் ‘டீசல்’ என்ற படத்திலும் அனன்யா நடித்துள்ளார். மலையாள நடிகையான அவர், திருமணத்துக்குப் பிறகு தமிழில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தற்போது அவர் ஹீரோயினாக இல்லாமல், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட எந்தக் கேரக்டராக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

The post மீண்டும் இணைந்த சமுத்திரக்கனி, அனன்யா appeared first on Dinakaran.

Tags : Samudrakani ,Ananya ,Chennai ,Ananam ,Seatrakani ,
× RELATED விஜய் அரசியலுக்கு வருவது...