×

பாடாலூர் அருகே சிறுவயலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

 

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வளமையம் சார்பில் சிறுவயலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நேற்று நடைபெற்றது. கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வழியில் மாற்ற கோடை கொண்டாட்டமாக ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன்படி, சிறுவயலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி அங்கம்மாள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மந்திரமா? தந்திரமா? கணிதம் சார்ந்த விளையாட்டு, எளிய அறிவியல் சோதனைகள், கதை – கற்பனை விளையாட்டுகள் ஆகிய தலைப்புகளில் தண்ணீரில் குண்டூசி மிதித்தல், பிறந்தநாள் தேதி கண்டுபிடித்தல், புள்ளி வைத்து வரைதல் விளையாட்டு, பலூனை நேராக நிற்க வைத்தல், நூலின் மூலம் ஒலிப் பரிமாற்றம், கதை சொல்லி முடித்து வைத்தல், நமக்குத் தெரிந்த இடங்களைப் படம் மூலம் வரைதல், செய்தித்தாள்களைக் கொண்டு விதவிதமான தொப்பிகளைச் செய்தல், கைரேகை மூலம் படம் உருவாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கருத்தாளராக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ரம்யா, மலர்விழி, யாழினி, ஷாலினி, சுசி ஆகியோர் செயல்பட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பாடாலூர் அருகே சிறுவயலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா appeared first on Dinakaran.

Tags : millennial science festival ,Shiruvayalur Puradashi Union Middle School ,Badalore ,Badalur ,Aalathur ,Thaluka ,Badalur Local Enrichment ,Pravakadhi Union Middle School ,Siruvayalur Village ,Thousand Science Festival ,Childhuvalur Padalur Naval Union Middle School ,Patalore ,
× RELATED கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு...