×

நவ்லாக் ஊராட்சியில் அரசு பண்ணையில் கலெக்டர் திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள அரசு பண்ணைகளில் கலெக்டர் வளர்மதி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சியில் உள்ள அரசு தென்னை வீரிய ஒட்டுப்பண்ணை 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த பண்ணையில் நெட்டை மரம் முதல் குட்டை மரம், குட்டை மரம் முதல் நெட்டை மரம் என தென்னங்கன்று வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கலெக்டர் வளர்மதி இந்த தென்னை வீரிய ஒட்டுப்பண்ணையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பண்ணையில் வளர்க்கப்படும் தென்னை கன்று ரகங்கள் குறித்து கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள், இங்கு வளர்க்கப்படும் தென்னை கன்றுகளை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாகவும், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தென்னைகன்றுகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது எனவும், வீரிய தென்னை ஒட்டு உற்பத்தி செய்து மற்ற மாவட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது எனவும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து காய்ந்த தென்னை ஓலை மட்டையை நவீன இயந்திரம் மூலம் உரமாக்குவதை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார். பின்னர், பண்ணையில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தி தர வேண்டி கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தோட்டக்கலை பண்ணையை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த தோட்டக்கலை பண்ணையில் மா ஒட்டு செடி, சப்போட்டா, நாவல் ஒட்டு, கொய்யா, குழிதட்டு நாற்று, மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் நாற்றுகள், பப்பாளி போன்ற செடிகள் வளர்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, மா ஒட்டு கட்டும் முறையையும், கொய்யா பதியன் போடும் முறைகளையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டார். தொடர்ந்து பண்ணை வளாகத்தில் மரக்கன்றை கலெக்டர் நட்டார்.

ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, துணை இயக்குனர் (திட்டம்) செல்வராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (அக்ரி) விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், உதவி இயக்குனர் பசுபதிராஜ், தோட்டக்கலை அலுவலர் நீதிமொழி, வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், வேளாண்மை அலுவலர் பிரேமா குமாரி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மோனேஸ், அருண் ஆகியோர் உடனிருந்தனர்.

The post நவ்லாக் ஊராட்சியில் அரசு பண்ணையில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nowlag panchayat ,Ranipet ,Varamati ,
× RELATED ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்