×

திருப்பதி கெங்கையம்மன் விழாவில் 16ம் தேதி நடைபெறும் விஸ்வரூப தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

*பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்

திருப்பதி : 16ம் தேதி நடைபெறும் விஸ்வரூப தரிசன திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
திருப்பதி ெகங்கையம்மன் திருவிழா கடந்த 2 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் 3ம் நாளான நேற்று காவல்துறை சார்பில் திருப்பதி மாவட்ட காவல்துறை எஸ்பி பரமேஸ்வரர் தலைமையில் அவரது கேம்ப் அலுவலகத்திலிருந்து ெகங்கையம்மனுக்கு புடவை சீர்வரிசையை மேளதாளங்கள், மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக கொண்டு வந்து ெகங்கை அம்மனுக்கு சமர்ப்பித்தனர். அதேபோல் கலெக்டர் வெங்கடரமணா குடும்பத்துடன் திருப்பதி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலையிலிருந்து அம்மனுக்கு பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தார்.

வழி நெடுகிலும் கலாச்சார நடனங்கள், இசை கருவிகள் முழங்க ஊர்வலமாக வந்தனர். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஹரிதா கூழ் பானையை தலையில் ஏந்தி ஊர்வலமாக வந்தார். பக்தர்கள் மகா காளி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வந்தனர். ஆந்திர மாநிலத்தில் 3வது நாளும் திருவிழா களைக்கட்டியது. கெங்கை அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டாடை உடுத்தி சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவிழா குறித்து எஸ்பி பரமேஸ்வர் கூறியதாவது: கெங்கையம்மன் திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி நடைபெறும் விஸ்வரூப தரிசன திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என்பதால் அன்று பாதுகாப்பிற்காக ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சாலை போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைவரும் அம்மனின் அருளை பெற்று வளமாக நலமாக இருக்க வேண்டும் என்றார்.

The post திருப்பதி கெங்கையம்மன் விழாவில் 16ம் தேதி நடைபெறும் விஸ்வரூப தரிசனத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Vishvarupa darshan ,Tirupati Kengaiyamman festival ,Tirupati ,Vishwarupa darshan festival ,Vishwarupa darshan ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...