×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் காருண்யா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

பெருந்துறை, சேனடோரியம், சிலேட்டர் நகரில் உள்ள காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 வகுப்பு பயின்ற 78 மாணவ-மாணவியரும் அரசுப் பொது தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். எஸ்.மௌலிகா 586 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், எஸ்.ஷெரின் ப்ரீத்தா 581 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், எம்.ஆர்.கிருத்திகா, என். ராஷ்மிகா ஆகியோர் தலா 578 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 2 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 5 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 19 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 36 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பொருளியல் மற்றும் வணிகவியல் பாடத்தில் 3 மாணவர்கள், கணக்குப்பதிவியல் பாடத்தில் ஒரு மாணவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழில் 30 பேர், ஆங்கிலத்தில் 10 பேர், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களில் 7 பேர், உயிரியல் 8 பேர், கணக்குப்பதிவியல் 11 பேர், பொருளியல் 9 பேர், கணிதம் 4 பேர், கணினி பயன்பாடுகளில் ஒரு நபர், வணிகவியல் 14 பேர் என சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ- மாணவியர்களை கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவர் எம்.சக்தி குமார், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் கே.எஸ்.பொன்னுசுவாமி மற்றும் முனைவர் யசோதா பொன்னுசுவாமி ஆகியோர் பாராட்டி விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் காருண்யா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Karunya Vidya Bhawan Matriculation School ,Karunya Vidya Bhawan Matric Higher Secondary School ,Perundurai, Sanatorium ,Silator Nagar ,
× RELATED காந்தி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு