×

ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை

ஈரோடு, பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 126 மாணவ-மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இதில், மாணவர் எம்.எஸ்.மனோஜ்குமார் 600க்கு 591 மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதலிடமும், ஆர்.ஹரிஷ், எஸ்.பி.கீர்த்தனா ஆகியோர் தலா 590 மதிப்பெண்களை பெற்று 2-வது இடத்தையும், மாணவி இ.கேஷர்னி 589 மதிப்பெண்களை பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். 580 மதிப் பெண்களுக்குமேல் 10 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 57 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 90 பேரும் எடுத்து உள்ளனர். கணக்குப்பதிவியல் பாடத்தில் 15 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 6 பேரும், வணிகவியல் பாடத்தில் 3 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 2 பேரும், பொருளியல் பாடத்தில் ஒருவரும், இயற்பியல் பாடத்தில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர், ஆசிரிய-ஆசிரியைகளையும் பள்ளியின் தலைவர் என்.முத்துசாமி, தாளாளர் சி.பி.சந்திரசேகரன், பொருளாளர் வி. என்.சுப்ரமணியம், துணைத்தலைவர் கே.ஈஸ்வர மூர்த்தி, துணைச்செயலாளர்கள் என்.கோகுல சந்தான கிருஷ்ணன், கே.நாகராஜன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பாராட்டினர்.

The post ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை appeared first on Dinakaran.

Tags : JC ,JC's Matriculation Higher Secondary School ,Poonthurai Road ,Erode ,
× RELATED சீரான குடிநீர் விநியோகிக்க கோரி ஈரோட்டில் சாலை மறியல்